தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஸ்டேடியத்தில் புகையிலை விளம்பரங்கள் – பசுமைத் தாயகம் அமைப்புக் கண்டனம் !
- சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியின் அறிவிப்பு
- விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்புங்கள்: கலெக்டர் உத்தரவு
- இரண்டாம் திருமணத்திற்கு ரெடி ஆன ரேஷ்மா? மாப்பிளை இவர் தானா?
- ஸ்வெட்டர்னு பில்டப் கொடுத்து கோணிப்பைய கட்டி விட்டு... பாவம்யா அந்த மாடு!!
பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம்...அதிபயங்கர சலுகை!.. ராமதாஸ் கிண்டல் ’டுவீட்’
ஏற்கனவே நாட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டும் கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவிவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் துப்பாக்கி உரிமம் உடனடியாக வழங்கப்படும் என குவாலியர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு, பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், மத்தியப் பிரதேசத்தில் 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால் துப்பாக்கி உரிமம் உடனடியாக வழங்கப்படும்: குவாலியர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - அடக் கொடுமையே.... பசுக்களுக்கு போர்வை கொடுத்தால் குற்றவாளிகள் கூட புனிதர்கள் ஆகிவிடுவார்களோ?
அதிசயம்... ஆச்சரியம்.... ஆனால் உண்மை. 10 பசுக்களுக்கு போர்வை வாங்கிக் கொடுத்தால்
அதிபயங்கர சலுகை. இது வேறெங்குமல்ல... மத்தியப் பிரதேசத்தில் தான்...... இதைவிடக் கொடுமை என்னவெனில் பசுவுக்கு போர்வை தருவோருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என்பது தான் அந்த அதிபயங்கர சலுகை! என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், வட மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆடிய நடனப் பெண், சிறிது நேரம் இடைவெளி விட்டதால் ஒரு நபரால் முகத்தில் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
