வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (09:03 IST)

வயிற்றுக்குள் இருந்த 20 கிலோ கட்டி – அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை !

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த  ரதி என்ற பெண்ணுக்கு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வயிற்று வலி இருந்துள்ளது. எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அவரது வயிறும் பெரிதாக ஆரம்பித்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் அவர் சென்று பரிசோதனை செய்ய அவர் வயிற்றில் சினைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து கடந்தவாரம் அவரது வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் ரதி நலமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.