சின்ன மோடி பேச மாட்டார்!. ஏன் பயப்படுறீங்க?.. பாராட்டுவிழா நடத்துங்க!.. புளூசட்ட மாறன் நக்கல்!...
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்ந்து சொல்லியும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. தற்போதும் அதையே சொல்லியிருக்கிறது. இதையடுத்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து பேச தமிழக முதல்வர் விஜய் முடிவெடுத்தார். வருகிற 3ம் தேதி அவர் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இங்குள்ள சூழலில் நீங்கள் இங்கே வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார். சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் காவிரி பிரச்னை வந்தபோது திமுக, அதிமுக ஆட்சிகளில் போராட்டம், உண்ணாவிரதங்கள் நடந்தன. காவிரிக்காக வழக்கு தொடுத்து வெற்றியும் கிடைத்தது. இங்கிருந்த ஆளுங்கட்சி தலைவர்கள்.. கர்நாடக அரசுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தனர். அது வரலாறு. ஆனால்.. நமது 'சின்ன மோடி' எந்த வம்பு தும்புக்கும் போகாமல் மௌனமாகத்தானே இருக்கிறார்?
பிறகு ஏன் உங்கள் மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம்? மேகதாது குறித்து ஒருவார்த்தை கூட பேசாமல் அழகாக அமைதி காக்கும் சின்ன' மோடி' அவர்களை அழைத்து நீங்கள் பாராட்டு விழா நடத்தாமல்.. வர வேண்டாம் என சொல்வதுதான் பண்பாடா?
ஒருவேளை 'Democratic Man' பட தயாரிப்பாளர் உங்கள் மாநிலக்காரர் என்பதால்.. தியேட்டர் வசூல் பாதிக்காமல் இருக்க.. இவரை அங்கே வர வேண்டாம் என்கிறீர்களா? நீங்கள் அழைத்தாலும் அங்கே படம் ஓடி முடியும் வரை.. இவர் வர மாட்டார். வந்தாலும் பேச மாட்டார். இது உலகிற்கே தெரியுமே? உங்களுக்கு ஏன் தெரியவில்லை? பக்கத்து வீட்டில் இருந்தும் தெரியாமல் போனதேன்?
பேசாமல் இருக்க எதற்கு ஒரு மீட்டிங்? அதற்கு ஏன் மாநிலம் விட்டு மாநிலம் பயணித்து நேரம் மற்றும் பணத்தை விரயமாக்க வேண்டும்? சொல் அல்ல. செயல். செயலும் அல்ல. மௌனம். இதுதான் எங்கள் 'சின்ன மோடி'.
வாழ்க சனநாயகம். வளர்க சனநாயகர். அசத்துங்க... சின்ன மோடி என பதிவிட்டிருக்கிறார்.