திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (17:31 IST)

மதுரையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் உயிரிழப்பு

fire crack
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கருமாத்தூர் செல்லும் வழியிலுள்ள அழகுசிறை என்ற கிராமத்தில் விபிஎம்  பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலையில் இன்று  திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு, இதில், 5 பேர் பலியாகினர். மேலும், 13க்கும் மேட்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பட்டாசு வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து  சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆய்வு செய்து வருகிறார்.



Edited by Sinoj