விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை முன்னிறுத்தி ஒரு குட்டி கதையைக் கூறியிருந்தார். இந்த உவமை தற்போது பிக்பாஸ் ஜூலிக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையேயான ஒரு பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு கதையும் ஜூலியின் சர்ச்சைப் பேச்சும்:
விஜய் சொன்ன கதையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ஜூலி, "விஜய் அண்ணா, உங்கள் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் நிஜமான ஜல்லிக்கட்டு காளை முன்னால் புல்லுக்கட்டோடு நின்றால் விபரீதம் ஆகிவிடும். ஏற்கெனவே உங்கள் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டார். இது விஜய் ரசிகர்களைக் கடுமையாகச் சீண்டியது.
'மண்டையில் மைனர்' - ஜூலியின் நேரடிச் சவால்:
ஜூலியின் விமர்சனத்திற்குத் தவெகவினர் சமூக வலைதளங்களில் வசவுகளுடன் பதிலடி கொடுக்க, ஜூலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுப் போரைத் தீவிரப்படுத்தினார். அதில், "தவெக-வில் இருப்பவர்கள் 'வல்கர் வாரியர்ஸ்' போலச் செயல்படுகிறார்கள். உங்களைத்தான் 'மைனர்கள்' என்று சொன்னேன், இப்போது புரிகிறது நீங்கள் 'மண்டையில் மைனராக' இருக்கிறீர்கள் என்று. என்னைத் திட்ட வேண்டும் என்றால் என் அலுவலகத்திற்கு வாருங்கள். நீங்கள் தான் பனையூரை விட்டு வரமாட்டீர்கள், நான் வேண்டுமானால் வரவா?" என விஜய்க்கு நேரடியாகச் சவால் விடுத்தார்.
தனிப்பட்ட தாக்குதலும் '3-வது புருஷன்' பதிலடியும்:
ஜூலியின் காரசாரமான பேச்சால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு அஞ்சாத ஜூலி, ஒரு கிண்டலான வீடியோவை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.
அருகில் இருக்கும் ஒருவரைச் சுட்டிக்காட்டி, "இவர்தான் என் மூன்றாவது புருஷன்" என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், "தேர்தல் சமயத்தில் சரியாகக் கவனித்து 'மடக்கு ஊதி' (தவெக சின்னம்) சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள். மாத்திப் போட்டுவிட்டால் அப்புறம் அண்ணனுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய்விடும்" என்று நக்கலாகப் பேசியுள்ளார்.
ஜூலியின் இந்தத் தொடர் பதிவுகள் தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இருதரப்புக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவரை இவ்வளவு வெளிப்படையாகச் சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் சீண்டுவது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.