விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 165 பேர் மீது வழக்குப் பதிவு !
இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை முதலே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்த நிலையில், சென்னையில் அரசு விதித்த நேரக் கட்டுப்பாடுகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 165 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளாதாக தகவல் வெளியாகிறது.
சென்னையில் பல இடங்களில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது, விபத்துகள் ஏற்பட்டதாகவும், தமிழகம் முழுவதும் சுமார் 280 இடங்களில் பட்டாசு விபத்து சம்பவம் நடந்துள்ளதாகவும்; ஆனால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Edited by Sinoj