ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..
திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என தவெக முயற்சி செய்து வருகிறது.. ஆனால் தவெக ஒரு புதிய கட்சி.. திமுக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி.. மேலும் பல வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு கட்சி.. எனவே அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதே நமக்கு நல்லது என சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள்..
ஆனால் ராகுல் காந்தியோ இன்னும் எத்தனை வருடத்திற்குதான் அதிகார பகிர்வு இல்லாமல் வெறும் கூட்டணியில் மட்டுமே இருக்க முடியும்.. நமக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைக்கிறார்.. அதனால்தான் கடந்த சில நாட்களாகவே ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கை காங்கிரஸில் அதிகமாக பேசப்பட்டு வந்தது..
அதேநேரம், அப்படி பேசிய எந்த நிர்வாகிகள் மீதும் ராகுல் காந்தி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இது ராகுலின் குரலாகவே பார்க்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 25 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்தது... ஆனால் அதை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருக்கு கிரிஷ் சோடங்கர் பேட்டி கொடுத்தார். அதோடு, திமுகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையிலிருந்து அவர் விலகிவிட்டார். ஒருபக்கம், ஹைதராபாத்தில் தங்கி இருக்கும் ராகுல் காந்தியை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.. மேலும், அந்த சந்திப்பில் மாணிக்கம் தாகூர் எம்பியும் உடனிருப்பார் என செய்திகள் வெளியானது.
ஆனால் அந்த செய்தியை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மறுத்திருக்கிறார்.. இது பற்றி செய்தியாளர்கள் எழுதிய கேள்விக்கு பதில் சொன்ன அவர் ஆதவ் அர்ஜுனாவை யார் என்றே ராகுல் காந்திக்கு தெரியாது.. அவரையே ஏன் ராகுல் சந்திக்கப் போகிறார் என அவர் கேட்டிருக்கிறார்...