திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:33 IST)

சடங்குகள் இல்லாத திருமணம் செல்லாது: மதுரை ஐகோர்ட் அதிரடி

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சடங்குகள் இல்லாத திருமணம் போலி திருமணம் ஆகவே கருதப்படும் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல் ஒரு சிலர்சீர்திருத்த திருமணம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சார்ந்த மதத்தின் சடங்கு சம்பிரதாயத்துடன் திருமணம் நடந்தால்தான் அதனை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் அவ்வாறு இல்லாமல் நேரடியாக திருமணம் நடந்தால் அதனை பதிவு செய்ய முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது 
 
எந்த சடங்குகளும் நடைபெறாமல் சான்றிதழ் வழங்கினால் அது போலி திருமண சான்றிதழ் ஆகவே கருதப்படும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த உத்தரவு
 
Edited by Mahendran