திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (11:55 IST)

பிரதமர் மோடி மதுரை வருகை: போக்குவரத்தில் மாற்றம்

modi
பிரதமர் மோடி மதுரைக்கு வர இருப்பதை அடுத்து மதுரை மற்றும் திண்டுக்கல் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் 
 
பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானத்தில் மதுரை வரவிருப்பதாகவும், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைகழகத்திற்கு அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஒருவேளை வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்தால் மதுரையிலிருந்து அவர் காரில் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று பகல் ஒரு மணிமுதல் மாலை 5 மணி வரை மதுரை திண்டுக்கல் சாலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன 
 
மதுரை நகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு அலங்காநல்லூர் பாலமேடு வழியாக செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மதுரையில் இருந்து தேனி செல்லும் வாகனங்கள் பாத்திமா கல்லூரி தேனி உசிலம்பட்டி ஆண்டிபட்டி வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் மற்றும் திருச்சி திருநெல்வேலியில் இருந்து செல்லும் வாகனங்களும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran