திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (20:08 IST)

கரகாட்ட நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி

மதுரை மாவட்டம் மேலப்பட்டி என்ற கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது கரகாட்ட நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின்போதும் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதிக்குமாறு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கரகாட்ட நிகழ்ச்சியில், ஆபாச நடனம், இரட்டை அர்த்தப் படல்களோ இருக்ககூடாது என்று, நாகரிகமாக உடையளித்துகொண்டு  நடனம் ஆட வேண்டும், ஜாதி, மதம் உள்ளிட்டவற்றைப் பற்றிய பாடல்களுக்கு ஆடக் கூடாது; மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்திக் கொண்டு,  நடனம் ஆடக் கூடாது  என்று பல கட்டுப்பாடுகளுடன் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால்,  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Edited by Sinoj