தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுகவின் பதவிக் காலம் வருகிற மே மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.. எனவே தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.. தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடையவுள்ளது.. எனவே ஐந்து மாநிலங்களுக்கும் மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது..
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் நடக்கும்போது பெரிய வன்முறை நடைபெறாது என்பதால் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது..2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.. ஆனால் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடந்தது.. ஏனெனில் அப்பொழுது கொரோனா காலம் என்பதால் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டது.. ஆனால் இந்த முறை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலை நடத்தலாமா என தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது.. எனவே 5 மாநிலங்களில் கடைசியாக தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம் என்கிறார்கள்
தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானோஷ் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு சென்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்நிலையில், 5 மாநிலங்களுக்கும் எப்போது தேர்தல் என்பதை மார்ச் 10ம் தேதிக்கு பின் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..