1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp giving pressure to vijay on jananayagan issue

இத பண்ணா உடனே சென்சார் சர்ட்டிபிகேட்!.. விஜய்க்கு வந்த அழுத்தம்?!.. கசியும் தகவல்!...

jananayagan
விஜயின் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் இன்று வெளியாகவில்லை. எனவே படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதுதான் சினிமா ரசிகர்களிடம் பேச்சு பொருளாக மாறியிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்து விட்டதாலும் பாஜகவை தனது கொள்கை எதிரி என அவர் சொல்லி வருவதாலும் மத்திய அரசின் தலைமையின் கீழ் செயல்படும் தணிக்கை வாரியம் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.. அரசியல்ரீதியாக விஜய்க்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்கள். அதனால்தான் வேண்டுமென்றே ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் கொடுக்கிறார்கள் என தவெகவினர் கூறுகிறார்கள்.

ஒருபக்கம், இது பாஜகவின் சதிதான் என காங்கிரஸும் சொல்ல துவங்கிவிட்டது. ஆனால், தணிக்கை வாரியத்திற்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.. நாங்கள் விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என பாஜக சொல்கிறது. இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. இந்த செய்தியை பிரபல செய்தி இணையதளமான மின்னம்பலம் பதிவு செய்திருக்கிறது.

விஜயை தொடர்பு கொண்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் ‘நீங்கள் தேர்தலில் தனித்து நில்லுங்கள்.. ஆனால் பிரச்சார மேடைகளில் திமுகவை மட்டுமே நீங்கள் டார்கெட் செய்ய வேண்டும்.. பாஜகவை திட்டவோ, விமர்சிக்கவோ கூடாது.. இதற்கு சரி என்றால் ஜனநாயகன் படத்திற்கு உடனே சென்சார் கிடைக்கும்’ என்று சொன்னதாக அந்த இணையதளம் செய்து வெளியிட்டிருக்கிறது.

ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் இப்போது வரை அந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் வேண்டுமென்றே மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். விஜய் எது நடந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
அடுத்த கட்டுரையில்
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. விஜய்க்கு 30-45 சதவீதம் வாக்குகளா? ஒரே தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் தோல்வியா?