1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வெள்ளி, 9 ஜனவரி 2026 (13:46 IST)

விஜய் எதுக்கும் வாய தொறக்கமாட்டார்!.. ஆனா அவருக்காக பொங்குறாங்க!.. ஆளூர் ஷாநவாஸ் தாக்கு!...

aloor
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தணிக்கை வாரியம் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதால் இன்னும் சில வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கூறியிருக்கிறது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடந்த வழக்கில் ஜனநாயகனுக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என இன்று காலை தீர்ப்பு வெளியான நிலையில் தணிக்கை வாரியம் தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறது.

அந்த வழக்கு இந்த மதியம் 2:30 மணிக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது. ஒருபக்கம் தணிக்கை வாரியம் மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் இதற்கு பின்னர் பாஜக இருப்பதாகவும் கூட்டணிக்கு வரவேண்டும் என விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே பாஜக அழுத்தத்தால் தணிக்கை வாரியம் ஜனநாயகனுக்கு பிரச்சனை கொடுக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி, கரூர் எம்பி ஜோதிம,ணி மற்றும் மாணிக்கம் தாகூர் எம்பி ஆகியோர் விஜய்க்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் ‘விஜய் கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார். ஆனால் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்க மாட்டார்.. இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்.. ஆனால் திருப்பரங்குன்றட்தில் தர்கா கூறி வைக்கப்படுவது பற்றி வாய் திறக்க மாட்டார்.. காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்..

ஆனால் 100 நாட்கள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்க மாட்டார். கரூர் விவகாரத்தில் மாநில அரசு இவரை தொடாத போதும் ‘ஏ திமுக அரசே’ என்று பொங்குவார். ஆனால் சென்சார் போர்ட் மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் ‘ஏ பாஜக அரசே’ என பொங்க மாட்டார்.. ஆனாலும், அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்’ என கருத்து தெரிவித்திருக்கிறார்.