செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஜனவரி 2026 (12:07 IST)

ஜனநாயகனுக்கு சான்றிதழ் கொடுக்க நீதிபதி உத்தரவு.. மேல்முறையீடு செய்த தணிக்கை போர்டு..

jananayagan
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தணிக்கை வாரியம் வழங்கிய தடையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தற்போது தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
 
தணிக்கை வாரியம் தனது மேல்முறையீட்டு மனுவில், படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் பொதுமக்களிடையே சட்டம் ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும், தணிக்கை விதிகளை மீறி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
அரசியல் பின்னணியில் உருவான இந்த படம், ஏற்கனவே பல தடைகளை தாண்டி ரிலீஸிற்கு தயாராகி கொண்டிருந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் இந்தத் திடீர் மேல்முறையீடு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கப்படுமா?  இதனால், ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva