தேர்வு கட்டணம், கல்வி கட்டணத்துடன் அபராதமும்…! – பாரதியார் பல்கலைகழகம் அறிவிப்பு!

Bharathiyar University
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:37 IST)
கொரோனா காரணமாக கல்வி, தேர்வு கட்டணம் கட்ட தாமதம் ஆன நிலையில் தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்கள் கட்டணத்தை அபராதத்துடன் கட்ட பாரதியார் பல்கலைகழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் பாரதியார் பல்கலைகழகத்தில் தொலைநிலைக்கல்வி வழியாக படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தாத நிலையிலும் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பாரதியார் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அபராதத்துடன் கட்டணங்களை செலுத்தி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கட்டணத்தை செலுத்தாவிட்டால் மேற்கொண்டு தேர்வு எழுதவும், படிக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :