சிங்கத்தின் முன்னால் சிறு முயல்களா? களமாட வாங்க! – சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர்!

Sasikala poster
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (11:59 IST)
அதிமுக தொண்டர்களோடு சசிக்கலா அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீப காலமாக சசிக்கலா ஆதரவு போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையானது முதலாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஓய்வில் இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சியாக உள்ள நிலையில் தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடம் சசிக்கலா செல்போனில் உரையாடுவது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் வருகின்றன. தற்போது கும்பகோணத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ”முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ! அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ! தியாகத் தலைவியே தூரோகத்தை வேரறுத்து களமாட வாருங்கள்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :