திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (10:24 IST)

பழைய விலைக்கே பால் விற்பனை; 22 ஆவின் நிலையங்களுக்கு சீல்! – அமைச்சர் நாசர் தகவல்!

தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட நிலையில் பழைய விலைக்கே விற்ற பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்த நிலையில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையில் பல இடங்களில் ஆவின் விற்பனை நிலையங்களில் குறைக்கப்பட்ட விலையில் பால் பாக்கெட்டுகள் விற்காமல் பழைய விலைக்கே விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர் “சென்னையில் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த 22 ஆவின் பால் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.