இனிமேல் இந்த பக்கம் மீன் பிடிக்க வரக்கூடாது! – தமிழக மீனவர்களை துரத்திய இலங்கை!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (11:01 IST)
வங்க கடலில் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை அரசு அவர்களை தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர் சம்பவங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்கள் பலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியதுடன், அவர்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இனி இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :