1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bharathiraja wishes to Sasikala

சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா!

சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த நிலையில் விடுதலை ஆக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என திமுக எம்பி கனிமொழி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் தனது டுவிட்டரில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கொரானா பாதிப்பால் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிப்புக்குரிய திருமதி. சசிகலா அவர்கள் பூரண நலம்பெற வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்
 
அடுத்த கட்டுரையில்
Google pay, Phone Pe ஆப்கள் சில நாட்களுக்கு இயங்காது ! ஏன் தெரியுமா??