வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (13:05 IST)

4 - 5 நாட்களை சசிகலா கடப்பது கஷ்டம் : விக்டோரியா மருத்துவமனை!!

விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா சசிகலாவின் உடல்நிலை குறித்து பேட்டி. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.    
 
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, சசிகலாவிற்கு தற்போது காய்ச்சல் இல்லை. நுரையீரல் பாதிப்பால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மூச்சு திணறல் இருக்கும். இன்னும் 10 - 15 நாட்கள் வரையில், விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.