திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:01 IST)

சசிகலா குணமடைய வாழ்த்து கூறிய கனிமொழி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாகு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. பெங்களூர் சிறையிலிருந்து தண்டனை முடிந்து இன்னும் ஐந்து நாட்களில் விடுதலை ஆக உள்ள நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர் விடுதலைக்குப் பின்னரும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சசிகலா குணமடைய வேண்டும் என்று அமமுகவினர் மட்டுமே தற்போது வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவினர் சசிகலாவின் உடல்நிலை குறித்து எந்த கருத்தும் கூறாமல் உள்ளனர் 
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி சசிகலா பூரண குணமடைய வேண்டுகிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது