1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala will change hospital?

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா?

sasikala
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அவரது உறவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெங்களூரு பழைய விமான நிலையம் அருகே உள்ள மணிப்பால் என்ற மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அவரது உறவினர்கள் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இன்னும் ஐந்து நாட்களில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ள நிலையில் அவர் குறைந்தது பத்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
About Writer
siva