வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (17:36 IST)

காட்டு யானையை உயிரோடு கொளுத்திய கொடூரம்! – பதைபதைக்க வைக்கும் வீடியோ!

தமிழகத்தின் யானைகள் சரணாலயமான முதுமலையில் காட்டுயானை உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் யானைகள் சரணாலயமான முதுமலையில் உள்ள முசினக்குடி பகுதியில் தீ காயங்களுடன் சில மாதங்களாக சுற்றி வந்த காட்டு யானை ஒன்று கடந்த 19ம் தேதி உயிரிழந்தது.

இந்நிலையில் காட்டு யானை மீது ஆசாமிகள் சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை விரட்ட டயரில் தீ வைத்து யானை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் டயர் உருகி யானை மீது ஒட்டிக்கொண்டதால் யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.