தொடர்புடைய செய்திகள்
- சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!
- 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தி கருணாநிதி பாடம் அறிமுகம்.. 11 தலைப்புகளில் செய்த சாதனை..!
- கல்லூரி முதல்வரை மாற்ற எதிர்ப்பு : கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் போராட்டம்
- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பெயில்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு..!
- சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?
நாளை பிளஸ் 2 ரிசல்ட்.. நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம்..!
காலை 9 மணிக்கு பிளஸ் டூ ரிசல்ட் வர இருக்கும் நிலையில் நாளை முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் அடுத்ததாக கல்லூரிகளில் சேர தயாராகி வரும் நிலையில் நாளை ரிசல்ட் வெளிவர உள்ளது. நாளை காலை ரிசல்ட் வந்தவுடன் மாணவர்கள் எந்த கல்லூரிகளில் சேரலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வார்கள் என்ற நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரிசல்ட் பார்த்த ஒரு சில மணி நேரம் மணி நேரங்களிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் மருத்துவம் போலவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
