வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மே 2024 (10:58 IST)

10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தி கருணாநிதி பாடம் அறிமுகம்.. 11 தலைப்புகளில் செய்த சாதனை..!

ஏற்கனவே 9 ம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும், கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
குழந்தையில் இருந்த கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran