1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. MP state school students all fail

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பெயில்.. பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு..!

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தேர்ச்சி பெறாததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில்  12ஆம்   வகுப்பு பொதுத்தேர்வு நடந்த நிலையில் அங்கே பர்வானி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 85 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை  அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியரே இல்லை என்றும் அந்த மாணவர்களுக்கு கணித பாடப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் தான் பாடம் எடுத்ததாகவும் அதனால் தான் அனைத்து மாணவர்களும் பெயில் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மனைவி மீது கொலை வெறி தாக்குதல்.! கணவரை கைது செய்த காவல்துறை..!!