திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:13 IST)

ஒரே நம்பிக்கையும் போச்சு: திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்த தமிமுன் அன்சாரி..!

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியவுடன் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி என்பதும் அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தான் வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரே கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவும் கிடைக்காமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களுக்கு முன் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வரும் நிலையில் இந்த முறை அதிமுக தனித்து விடப்பட்டது என்பது பரிதாபமான செய்தியாக உள்ளது.

அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் தவிர வேற எந்த கட்சியும் இதுவரை கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை கூட நடத்தாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக இந்த முறை 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலைத்தமைதான் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by siva