ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:07 IST)

ஒருவர் கூட விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.. வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்..!

தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு  தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் அறிவித்த நிலையில் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்றும் தேமுதிக அலுவலகமே காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது என்றும் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் அவர் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் இன்று காலை முதல் நாளை காலை வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் தேமுதிக அலுவலகத்தில் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்றும் அக்கட்சியின் அலுவலகம் காலியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒருவேளை கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியானவுடன் விருப்பமனு கேட்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva