வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (11:01 IST)

அதிமுக - தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை.. மாநிலங்களவை சீட் கிடைக்குமா?

premalatha vijaynakanth
அதிமுக மற்றும் தேமுதிக ஏற்கனவே இரண்டு முறை கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் இன்று மாலை மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணியிலும் ஓரளவுக்கு கட்சிகள் இணைந்து தொகுதி உடன்பாடும் ஏற்பட்டு வருகிறது 
 
ஆனால் அதிமுக கூட்டணியில் இன்னும் ஒரு பெரிய கட்சி கூட இணையாத நிலையில் தேமுதிக மட்டுமே அந்த கூட்டணியின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை இரு கட்சிகள் இடையே மூன்றாம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே தேமுதிக மூன்று மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்கும் நிலையில் மாநிலங்களவை தொகுதியை கொடுப்பதில் மட்டுமே அதிமுகவுக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது 
 
எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தாக வாய்ப்பாக இருக்கிறதாக கூறப்பட்டாலும் தேமுதிகவை பொருத்தவரை கடைசி நிமிடம் வரை தன்னுடைய முடிவை மாற்றும் என்பதால் எதையும் உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
Edited by Siva