ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (12:53 IST)

திமுக கூட்டணிக்கு பெருகும் ஆதரவு..! அதிமுகவை கழட்டிவிட்ட மஜக..!!

Thamimmun Ansari
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாஜக மற்றும் அதிமுக தங்களது கூட்டணிகளை இதுவரை இறுதி செய்யாத நிலையில், திமுக தொகுதி பங்கீட்டையே இறுதி செய்துள்ளது.
 
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 19 தொகுதிகள் தவிர்த்த 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி, தூத்துக்குடி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர், தென்காசி, தேனி, ஆரணி, அரக்கோணம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், காஞ்சிபுரம், பொள்ளாச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய தொகுதிகளில் திமுக தங்கள் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.

 
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.  அதிமுக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, வருகிற மக்களை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.