1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (14:32 IST)

அதிமுக கூட்டணியில் தேமுதிக பாமகவின் நிலை என்ன..? கூட்டணி உறுதியா..?

admk dmdk pmk
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வருகிற 20 ஆம் தேதி கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக  வாய்ப்புள்ளது.
 
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி  ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
 
பாஜக - அதிமுக கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வருகின்றது. பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் கூட்டணியில் இழுக்க இரு கட்சிகளும் தீவிர பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு வருகின்றன.
 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமினுடன் நேற்றிரவு பாமக எம்எல்ஏ அருள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை இன்று அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேமுதிகவுடனும் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
வருகிற மார்ச் 20-ஆம் தேதி மூன்று கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.