1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai says about tasmac

'தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..!

கள்ளுக்கடை
தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 
 
நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 
 
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகளை திறக்க பாரதிய ஜனதா ஆதரவு தருவதாக கூறினார் 
 
டாஸ்மாக் வருமானத்தை குறைத்து அதே வருமானத்தை வேறு எப்படி ஈட்ட முடியும் என பதினைந்து நாட்களில் பாஜக சார்பில் தமிழக அரசுக்கு வெள்ளை அறிக்கை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சித்தராமையா பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வருக்கு அவமரியாதையா?