வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (11:24 IST)

கவர்னரை சந்தித்து மனு அளித்த அண்ணாமலை.. விஷச்சாராய மரணம் குறித்து விசாரணையா?

Annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக கவர்னர் ரவியை சந்தித்து விஷச்சாராயம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை கிண்டி ராஜபவன் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் விஷ சாராயம் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட ஆளுநரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார் 
 
மேலும் தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குமாறும் அவர் ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளித்துள்ளார். இதனை அடுத்து ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva