டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தஞ்சை அருகே நடந்த நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இருவரும் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாகவும், பாரில் மது வாங்கி குடித்த விவேக என்ற 36 வயது நபர் மற்றும் குப்புசாமி என்ற முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியர் சிறைபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது டாஸ்மார்க் சரக்கை குடித்த இருவர் உயிரிழந்திருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva