வெள்ளி, 1 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (13:39 IST)

என்னிடம் ரூ.2,000 நோட்டு இல்லை, திமுகவுக்குதான் பாதிப்பு: அண்ணாமலை

என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பால் திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நேற்று இரவு இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதற்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது பணம் மதிப்பழப்பு நடவடிக்கை இல்லை. 
 
மூன்றரை வருடங்களாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran