1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (08:07 IST)

சித்தராமையா பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வருக்கு அவமரியாதையா?

சமீபத்தில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்ற நிலையில் அந்த பதவி ஏற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்றிருந்தார். இந்த நிலையில் முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றதும் அனைத்து கட்சி தலைவர்களும் கைகோர்த்து நிற்கும் நேரம் வந்தபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கிலாட், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் மேடையின் முன்புறத்தை ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கமல்ஹாசன், திருமாவளவன், டி ராஜா ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி ஏற்பு விழா முடிந்ததும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்களை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மிகுந்த மரியாதை உடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva