வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 மே 2023 (12:27 IST)

ரூ.2000 நோட்டை வாங்கி கொள்ளுங்கள்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தல்..!

டாஸ்மாக் கடையில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாயை தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 
 
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே மது வாங்க செல்வார்கள் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran