1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai name is missing in bjp candidate list

அண்ணாமலைக்கு அல்வா!.. பாஜக வேட்பாளர் பட்டியலில் பேர் மிஸ்ஸிங்!..

annamalai
தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வேல்முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலரோடு வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றிருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஒருபக்கம்,ம் அண்ணாமலை தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால்தான் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதில் தாமதமாகி வருவதாகவும் செய்திகள் கசிந்தது.

இந்நிலையில்தன்,  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும், எல்.முருகன் அவினாசி தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் போட்டியிடுக்கிறார்கள்.

அதேநேரம், அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்படவில்லை. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட அவர் கேட்டிருந்த நிலையில் அந்த தொகுதி கிருத்திகா சிவக்குமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அண்ணாமலை இனிமேல் தமிழக அரசியலில் இருந்து ஓரங்கட்டுப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு சீட் வழங்காத பாஜக!.. சுந்தர்.சி என்ன செய்வாரு?!...