பிரேமலதாவுக்கு அல்வா!. கேட்ட 3 தொகுதிகளையும் கொடுக்காத திமுக!.. வெளியான இறுதிப் பட்டியல்...
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கியது முதல் கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். ஒருமுறை கூட அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
அவரின் மறைவுக்குப் பின் அவரின் மனைவி பிரேமலதா திமுகவின் பொதுச்செயலாளராக மாறினார். தற்போது பிரேமலதாவும் அவரின் மகன் விஜய பிரபாகரனும் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது தேமுதிக.
20 சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே கூட்டணி என அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடன் பிரேமலதா பேரம் பேசினார். ஆனால், பிரேமலதா கேட்டதை எடப்பாடி பழனிச்சாமி கொடுக்க முன் வரவில்லை. ஆனால் ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக ஒத்துக்கொண்டது. அதேபோல் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, மதிமுக போன்ற கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்த திமுக தேமுதிகவுக்கு 10 தொகுதிகளையும் கொடுக்க ஒப்புக்கொண்டது..
தற்போது தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. 10 தொகுதிகளில் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம், பார்த்தசாரதி வெற்றிபெற்ற விருகம்பாக்கம், தனது சொந்த தொகுதியான் ஆம்பூர் ஆகிய மூன்று தொகுதிகளையும் பிரேமலதா விரும்பி கேட்டிருந்தார். ஆனால் திமுக தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் தேமுதிகவுக்கு அந்த 3 தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை.
மாறாக விருதாச்சலம், விருதுநகர், தர்மபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மைலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.