1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn congress candidatest list not out

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!.. என்னதான் பிரச்சனை?...

selva
தமிழக காங்கிரஸில் எப்போதும் கோஷ்டிப்பூசல் இருக்கிறது. அந்த கோஷ்டிப்பூசல் இப்போது வரை தீரவில்லை. காங்கிரஸ் கடந்த பல வருடங்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேரதலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுககப்பட்டிருக்கிறது.

தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை காங்கிரஸ் வாங்கிக்கொண்டது. அதேநேரம், இப்போதுவரை 28 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்ந்தெடுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ‘மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோருடனும் ஆலோசனை செய்திருக்கிறோம்..

85 சதவீத தொகுதி வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 15 சதவீத வேட்பாளர்கள்தான் மீதம் இன்னும் சில மணி நேரங்களில் முடிவு செய்து இன்று இரவோ அல்லது நாளை காலையோ முழு பட்டியலையும் வெளியிடுவோம் என நேற்று காலை கூறினார். ஆனால், இப்போது வரை தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. வருகிற 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்குள் முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகள் கட்டாயம்.. 2031 முதல் அமல்படுத்த திட்டம்..!