1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anbil Mahesh says school admissions today

11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Tamilnadu
தமிழகத்தில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தற்போது கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
உச்சத்தை நெருங்கி தடாலென கவிழ்ந்த அதானி பங்குகள்! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!