உச்சத்தை நெருங்கி தடாலென கவிழ்ந்த அதானி பங்குகள்! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்று திடீரென பெரும் சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபலமான அதானி நிறுவனத்தின் ஷேர் மார்க்கெட் பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தன. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட அதானி பங்குகள் பெரும் ஏற்றத்தை சந்தித்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அதானி பங்குகள் வேகமாக உயரத் தொடங்கிய நிலையில் முதலீட்டாளர்கள் பலர் அதானி நிறுவனங்கள் மீது முதலீடு செய்தனர்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டு பங்கு முதலீடு நிதி நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதானிக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் 5% முதல் 20% வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அதானி குழுமம் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.