வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (11:12 IST)

உலகம் உயிர்த்திருக்க குருதி அவசியம் – கமல்ஹாசன் ரத்த தான பதிவு!

உலக ரத்த தான தினமான இன்று குருதிக்கொடையின் அவசியம் குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உலக ரத்த தான தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ரத்த தானம் கடந்த பல ஆண்டுகளில் பலரது உயிரை காப்பாற்ற காரணமாக இருந்துள்ளது. செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுகளை பரவலாக ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ரத்த தானம் குறித்து பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “உலகம் உயிர்த்திருக்க குருதிக் கொடை அவசியம். நெருக்கடி காலகட்டத்தில் குருதிக் கொடையாளர்களைக் கண்டறிவதிலும் குருதி பெறுவதிலும் சவால்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து தானம் செய்யவேண்டுமென உலக ரத்த தான தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.