1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Amit Shah thanks TN people in twitter

கழுவி ஊற்றிய தமிழகம்; நன்றி சொன்ன அமித் ஷா

அமித் ஷா
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் டுவிட்டரில் பதிவிட்டும் வரும் நிலையில் தமிழக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்தடைந்தார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பது தொடர்பாக பாஜக தமிழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடவதற்காக இந்த வருகை என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில் கோ பேக் அமித்ஷா (அமித்ஷா திரும்பிப் போ) என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் வந்துள்ளது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் பாஜகவினருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் மோடி தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
 
இதைத்தொடர்ந்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவும், அன்பும் அளித்த தமிழக மக்களுக்கு எனது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
உணவை வீணடித்தால் அபராதம்; சவுதி அரேபியா அதிரடி முடிவு