வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (16:12 IST)

வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை: பாஜகவை தாக்கும் சு.சுவாமி!

பாஜக ஆட்சிக்கு வரும் முன்னர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற இன்னும் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மேலும் அவர் கூறியது பின்வருமாறு, கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்தியா ஒளிர்கிறது என்று அரசு சார்பில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இந்துத்துவா மீதும், ஊழல் இல்லாத அரசு மீதும் நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்தது. அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக வெற்றி பெற இந்துத்துவாதான் துணை புரிந்தது.
 
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கிவிட்டது. ஆனால், இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற பாஜகவிற்கு மக்கள் கூடுதலாக இன்னும் 5 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.