வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (09:00 IST)

அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவுக்கு விடியல் இல்லை: திருநாவுக்கரசர்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் அவர் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அமித்ஷாவின் சென்னை வருகை பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'பாஜக தலைவர் அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் பாஜகவில் ஏற்படாது. அமித்ஷா வருகையால் பாஜகவுக்கு விடியல் ஏற்படபோவதில்லை. அதுமட்டுமின்றி அக்கட்சிக்கு அவரது வருகை ஒரு அமாவாசையாக இருக்கும் என்று கூறினார்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது போன்று தற்போது 'கோ பேக் அமித்ஷா' என்ற ஹேஷ்டேக் பரவலாக பரவி வருகிறது. இதனை எப்படி தடுப்பது என்று தெரியாமல் பாஜகவில் குழப்பத்தில் உள்ளனர்.