1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (10:18 IST)

கோ பேக் அமித்ஷா - டிரெண்டிங் ஆன ஹேஸ்டேக்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வரும் நிலையில் டிவிட்டரில் கோ பேக் அமித்ஷா என்கிற ஷேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

 
காவிரி விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பாக இருந்த கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது, அவருக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கருப்பு கொடி காட்டினர். மேலும்,வானில் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. மேலும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் கோ பேக் மோடி (மோடியே திரும்பிப் போ) என்கிற ஷேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இது பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
 
அதேபோல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பது குறித்து இன்று பாஜக தமிழக நிர்வாகிகளிடம் அமித்ஷா ஆலோசனை செய்யவுள்ளார்
 
இந்நிலையில் கோ பேக் அமித்ஷா (அமித்ஷா திரும்பிப் போ) என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடத்தில் வந்துள்ளது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் பாஜகவினருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த விவகாரமும் பாஜகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.