1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. durai vaiko we cant take any decision about tvk

துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் இருக்கிறோம்.. துரை வைகோ ஓப்பன்.,.

durai vaiko
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதனால்தான் விஜய்க்கும் முதல்வர் பதவி கிடைத்தது. அதேநேரம், திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
 
விஜய் முதல்வராக பதவியேற்றதும் திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். அதில், விஜயை வைகோ மிகவும் அன்புடனும், உற்சாகத்துடனும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். அதேபோல், வைகோவின் மகன் துரையும் விஜயை வரவேற்றார். அதோடு, வீட்டில் இருந்த உறவினர்கள் மட்டுமில்லாமல் வீட்டில் பணிபுரிந்து வரும் பெண்களையும் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ‘இவங்கலாம் விசில் சின்னத்தில் ஓட்டு போட்டவங்க’ எனவும் சொன்னார்.
 
அதேநேரம், விஜய் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவந்தபோது மதிமுக அதில் கலந்துகொள்ளவில்லை. திமுகவோடு சேர்ந்து வெளிநடப்பு செய்துவிட்டது. மேலும், செய்தியாளர்களிடம் தவெக ஆட்சி பற்றியும், முதல்வர் விஜயை பற்றியும் துரை வைகோ தொடர்ந்து பாராட்டி பேசி வருகிறார்.
 
இன்று முதல்வர் விஜய் திருச்சி சென்றபோது துரை வைகோ அவரை வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ ‘துரதிஷ்டவசமாக நாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம். உதயசூரியனில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை. கூட்டணி விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என கூறியிருக்கிறார். துரை வைகோ பேசுவதை பார்க்கும்போது வரும் காலத்தில் மதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.