தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து- அதிர்ச்சி வீடியோ
- தண்ணீர் கொடுக்க வந்த கேரளா – தடுத்து நிறுத்திய தமிழகம்
- அந்த நகையை காட்டுங்க – கடைக்காரர் திரும்பியதும் நகை பெட்டியை திருடிய கும்பல்
- “மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா” – மழை பெய்ய வைக்க அமைச்சரின் புதிய ஐடியா
- என் பொண்டாட்டிகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க – போலீஸிடம் கதறி அழுத ரவுடி
இருக்குற பஞ்சத்துல இவங்க வேற – தண்ணீர் குழாயை உடைத்த ஏர்டெல் நிறுவனம் – கடுப்பான மக்கள்
கடலூர் பகுதியில் நிலத்தடியில் கேபிள் பதிக்கும்போது அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாயை உடைத்துவிட்டு மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.
கடலூர் அருகே திட்டக்குடியில் தொலைதொடர்பு கேபிள்களை நிலத்தடியில் பதிக்கும் பணியில் ஈடுப்பட்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். அந்த பகுதியில் திட்டங்குடி பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் செல்கிறது. திட்டக்குடி முதல் கூத்தன்குடிகாடு வரை உள்ள கிராமப்பகுதிகளுக்கு இந்த நிலத்தடி குழாய் வழியாகதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வயர்களை பதிப்பித்த பிறகு அங்கே குறியீட்டு கல் வைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி கொண்டு கொட்டியிருக்கிறது. குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திட்டக்குடி பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பல பகுதிகள் தண்ணீர் இல்லாமல் திண்டாடி கொண்டிருக்க கிடைத்த தண்ணீரையும் இப்படி உடைத்து விட்டு கெடுத்து விட்டார்களே என திட்டக்குடு சுற்றுவட்டார மக்கள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
