திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (12:44 IST)

சென்னையில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து- அதிர்ச்சி வீடியோ

சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத டாட்டினம் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டது.

சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்கா குயின்ஸ்லேண்ட். பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் விளையாடும் வண்ணம் பல வகை ராட்டினங்கள் அங்கே உள்ளன. அவற்றில் ஒரு ராட்டினத்தில் நேற்று விபத்து ஏற்பட்டது. இரும்புதூண் ஒன்றை மையமாக கொண்டு தொட்டில் போன்ற அமைப்பில் பயணிகளை மேலும் கீழும் கொண்டு போகும் அந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்டது.

பயணிகள் தொட்டில் கீழே இறங்கி கொண்டிருக்கும்போது தரைக்கு மேலே சுமார் 7 அடி உயரத்தில் தொட்டில் அறுந்து விழுந்தது. இதனால் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது என்றாலும் யாருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மிக உயரத்தில் இருக்கும்போது அறுந்திருந்தால் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

இந்த விபத்தினால் உடனடியாக குயின்ஸ்லேண்ட் பூங்கா இழுத்து மூடப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் பூங்காவை ஆய்வு செய்து பாதுகாப்பானது என அங்கீகரித்தால் மட்டுமே பூங்கா மறுபடி திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.